மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இரவு தொடக்கம் பெய்து வரும் அடை மழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

 

மட்டக்களப்பு பிரதேசத்தின் தாழ்நில பகுதிகளான பல பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் மட்டக்களப்பு நகர் புறத்தில் உள்ள பல இடங்களும் நீரினால் மூழ்கியுள்ளன.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பாதைகளும் நீரில் மூழ்கி இருப்பதன் காரணமாக போக்குவரத்திற்கு மக்கள் பெரும் அசௌகரியங்களை ஈடுபட்டுள்ளனர்.