மின்சாரத்தின் தேவை தற்போது அதிகரித்த வண்ணமே உள்ளது. 2018 இல் வரக்கூடிய மின்தட்டுப்பாடு பற்றியும் நாம் ஏற்கனவே எச்சரித்துள்ளோம். இவற்றுக்கெல்லாம் தீர்வு மின்சார சபையின் மின்பிறப்பாக்க விரிவாக்கத்திட்டத்தை உடன் அமுல்படுத்துவதேயாகும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தம்மித்த குமாரசிங்க விடுத்தள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2018 ஆம் ஆண்டில் ஏற்படப்போகும் மின்தட்டுப்பாட்டினை நிவர்த்திக்கும் வகையிலான அனைத்து உபாயங்களையும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் தற்பொது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.