பதுளையில் லொறியொன்றினால் மோதுண்ட பாதசாரி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உழவு இயந்திரம் - துவிச்சக்கரவண்டி மோதிய விபத்து ; விவசாயி பலி, உழவு இயந்திர  சாரதி கைது | Virakesari.lk

பதுளைப் புறநகர்ப் பகுதியான கைலகொடை என்ற இடத்திலேயே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த 53 வயதான குறித்த பாதசாரியின் சடலம், பதுளை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து லொரியின் சாரதியை பதுளைப் பொலிசார் கைது செய்துள்ள நிலையில், குறித்த நபரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, பதுளைப் பொலிசார் மேற்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.