கொவிட்-19 அச்சம் காரணமாக சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் அலுவலக வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்று காரணமாக 2022 ஜனவரி 3-5 வரை தூதரகம் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலக்கட்டத்தில் அலுவலகத்தில் தொற்று நீக்கம் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால் அனைத்து பயனர்களும் ஜனவரி 6 ஆம் திகதி முதல் அலுவலகத்துக்கு வருகை தருமாறும் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.