வேவெலிதெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக கொழும்பு - கண்டி   பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை பஸ் வண்டி, மோட்டார் வண்டி  மற்றும் லொறி ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் மோட்டார் வண்டியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.