நாடளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்று தொடர்பில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

இன்றைய தினம் கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 24 உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

20 ஆண்களும், 04 நான்கு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்தவர்கள் என சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்றினால் இலங்கையில் பாதிப்படைந்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,019 பதிவாகியுள்ளது.

இதனிடையே முன்னதாக கொரோனா தொற்றுக்குள்ளான 224 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அதனால் கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 560,949 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.