இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வோருக்கான அறிவித்தல்

By Vishnu

02 Jan, 2022 | 10:20 AM
image

இலங்கைக்கு வருகை தருவதற்கு எதிர்பார்க்கும் சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை விசாக்களை வழங்கும் பயண மற்றும் குடிவரவு முகவர் என கூறி இணையத்தில் காணப்படும் போலி தளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விடுத்துள்ள அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளது. 

அதேநேரம் eta.gov.lk/slvisa என்பது இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கான விசா நோக்கங்களுக்கான ஒரே அதிகாரப்பூர்வ இணைத்தளம் என்பதை மீண்டும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

2021 டிசம்பரில் இலங்கை சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிபர்பு ஏற்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மேம்படுத்த இலங்கை போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right