ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நபர் முதலை கடித்து உயிரிழப்பு

By T Yuwaraj

02 Jan, 2022 | 11:21 AM
image

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் ஆறு ஒன்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை நேற்று சனிக்கிழமை (01) முதலை இழுத்துச் சென்று கடித்ததையடுத்து, அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

மண்டானை திருக்கோவில் 4 பிரிவைச் சேர்ந்த 55 வயதுடைய இராசநாயகம் விநாயகமூர்தி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த ஆற்றில் வழமைபோல சம்பவதினமான நேற்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆற்றில் இருந்த முதலை அவரை பிடித்து கடித்து நீருக்குள் இழுத்துச் சென்றது. இதையடுத்து அவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இதில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மஞ்சள் நிற சேலையுடன் சபைக்கு வந்த...

2022-12-01 19:35:47
news-image

2 ஆவது முறையாகவும் பணவீக்கம் வீழ்ச்சி...

2022-12-01 16:36:33
news-image

5 வயதுக்கு குறைவான சிறுவர்களில் 42.9...

2022-12-01 16:29:27
news-image

தள்ளி விடப்பட்டதால் காயமடைந்த களுத்துறை பிரதேச...

2022-12-01 18:37:10
news-image

மின்சாரக் கட்டண அதிகரிப்பை உடனடியாக நிறுத்தவும்...

2022-12-01 16:26:37
news-image

தொழிலதிபரின் ஒன்றரை கோடி ரூபா மோசடி...

2022-12-01 16:21:19
news-image

சீன தூதுவர் - வெளிநாட்டலுவல்கள் அமைச்சின்...

2022-12-01 19:33:57
news-image

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்க அரசாங்கம்...

2022-12-01 16:14:47
news-image

மின் விநியோகத்தை தடைசெய்தால் 3 இலட்சத்துக்கு...

2022-12-01 15:40:17
news-image

எனது அரசியல் தொழில்துறை வாழ்க்கை இன்னமும்...

2022-12-01 15:30:01
news-image

56.8 சதவீதமான மக்கள் இலங்கையை விட்டு...

2022-12-01 15:33:08
news-image

ரயில்களின் தாமதத்தைத் தடுக்க நேரத்தை மாற்றுவதால்...

2022-12-01 14:52:32