புத்தாண்டில் இலங்கை இராணுவம் வகிக்கப்போகும் வகிபாகம் என்ன ? - ஆபத்தான சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ள என்கிறார் தயான்

01 Jan, 2022 | 09:35 PM
image

(ஆர்.ராம்)

புத்தாண்டில் இலங்கை அரசியல், மற்றும் கட்டமைப்புக்களில் இலங்கை இராணுவம் வகிக்கப்போகும் வகிபாகத்திற்கான ஆபத்தான சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ளன என்று கலாநிதி தயான் ஜயத்திலக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

1931 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயக நாடாக அடையாப்படுத்தி வரும் இலங்கையில் இராணுவம் வெளிப்படுத்தியுள்ள சமிக்ஞைகள் 2022ஆம் ஆண்டு ஆபத்தான நிலைமைகளை நோக்கியதாக அமைந்துள்ளன.

புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தினது நாட்காட்டியும், நாட்குறிப்பும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டவர்களுக்கு பகிரப்பட்டது. இதில் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் புகைப்படம் பொறிக்கப்பட்டு ஆங்காங்கே பல்வேறுபட்ட பொன்மொழிகளும் , பழமொழிகளும் பதிப்புச் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, பழமொழிகள் மற்றும் பொன்மொழிகள் சார்லஸ் டிக்கன்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்களினது பொன்மொழிகளும் காணப்படுகின்றன.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக, “இலங்கை இராணுவமானது வளமான மற்றும் நிலையான தேசத்தை உருவாக்கி பராமரிக்கும் திறன் கொண்டது” என்ற வாசகம் பதிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இவ்விதமான வாசகத்தினை சீனவோ, ராஷ்யாவோ வெளிப்படுத்தவில்லை. குறி;ப்பாக இராணுவமான மக்கள் சீனப் படையோ அல்லது ரஷ்யா இராணுவமோ கூட வெளிப்படுத்தியது கிடையாது.

அவ்வாறிருக்கையில், இலங்கை இராணுவம் முதன்முதலாக தேசத்தினை பாரிப்பது உள்ளிட்ட விடயத்தினை குறிப்பிட்டுள்ளது. இதுவரையில் இவ்விதமாக பிரஸ்தாபிக்காத இராணுவம் இப்போது தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதன் பின்னணியை கூர்ந்து அவதானிக்க வேண்டியுள்ளது.

அதுநேரம், கிளிநொச்சிக்குச் சென்ற இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அங்கு புதிதாக நிறுவப்பட்ட கோப்ஸ் கட்டமைப்பினரைச் சந்தித்தபோது பசுமை விவசாயத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கும் அதுகுறித்த விழிப்புணர்வுகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்கும், இராணுவம் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளதோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இலக்கினை நோக்கி நகர்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் உரையாற்றி உள்ளார்.

இவ்விதமான நிலைமைகள் எல்லாம் அடுத்த ஆண்டு இராணுவம் எவ்விதமாகச் செயற்பட போகின்றது. அதன் வகிபாகம் என்ன என்ற சமிக்ஞைகளை தெளிவாக வெளிப்படுத்துவதாக உள்ளது. அதேநேரம், ஜனநாயக நாடொன்றில் இராணுவத்தின் இவ்விதமான பிரதிபலிப்புக்கள் மிகவும் ஆபத்தானவை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பஸ்ஸில் பயணித்த யுவதியின் கூந்தலை வெட்டிய...

2024-07-14 13:57:50
news-image

மொரந்துடுவ - பண்டாரகம வீதியில் மோட்டார்...

2024-07-14 13:47:49
news-image

வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் யாழில் செவ்வாயன்று...

2024-07-14 13:25:27
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சுப்பணிகளுக்கு 600 -...

2024-07-14 13:03:24
news-image

ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி தொடர்பில்...

2024-07-14 11:57:50
news-image

தேசிய மக்கள் சக்திக்கு சிறுபான்மையினரின் ஆதரவு...

2024-07-14 11:59:28
news-image

ஜனாதிபதி வேட்பாளர்களோடு நிபந்தனைகளுடன் பேசுங்கள் -...

2024-07-14 12:24:26
news-image

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் பெண்...

2024-07-14 11:06:04
news-image

இலங்கை தொடர்பான பயண வழிகாட்டலைத் தளர்த்துமா...

2024-07-14 10:02:13
news-image

விளக்கேற்றி பூஜை செய்து புதையல் தோண்ட...

2024-07-14 10:39:29
news-image

காத்தான்குடி - புதுக்குடியிருப்பில் எரிபொருள் பவுசர்...

2024-07-14 10:06:21
news-image

பொருளாதார, பாதுகாப்பு துறைசார் ஒத்துழைப்பை கட்டியெழுப்புதல்...

2024-07-14 09:57:02