கொவிட் தொற்றால் நேற்று 31 ஆம் திகதி 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இவ்வாறு 11 ஆண்களும் 5 பெண்களும் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,995 ஆக அதிகரித்துள்ளது.