2021 இல் கடற்படையினரால் 15 பில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்கள் மீட்பு

Published By: Digital Desk 3

01 Jan, 2022 | 02:03 PM
image

(எம்.மனோசித்ரா)

கடற்படையினரால் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து மீட்ப்பதற்காக அரசாங்கத்தின் கொள்கையை நிறைவேற்றும் வகையில் கடற்படையினரால், கடந்த ஆண்டு முழுவதும் இலங்கை கடற்பரப்புக்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 15.86 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்வழியாக இடம்பெறுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஏனைய அனைத்து சட்ட விரோத செயற்பாடுகளையும் ஒழிப்பதற்காக கடற்படையினரால் இலங்கையின் கடற்பரப்பிலும், கடற்கரைப் பிரதேசங்களிலும் மாத்திரமின்றி ஏனைய புலனாய்வு துறையினருடன் இணைந்து சர்வதேச கடற்பரப்பிலும் கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே இவ்வாறு பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதற்கமைய இலங்கை மற்றும் சர்வதேச கடற்பரப்புக்களில் 74 சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்புக்களின் போது 1268 கிலோ கிராமிற்கும் அதிக ஹெரோயினுடன் 119 உள்நாட்டு சந்தேகநபர்களும் , 22 வெளிநாட்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதேபோன்று 151 சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்புக்களில் 7095 கிலோ கிராமிற்கும் அதிக கேரள கஞ்சாவுடன் 186 உள்நாட்டு சந்தேகநபர்களும் , 7 வெளிநாட்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 73 சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்புக்களில் கிரிஸ்டல் மெதம்பிடமைன்  (Crystal Methamphetamine) எனப்படும் 158 கிலோ கிராமிற்கும் அதிக ஐஸ் போதைப்பொருடன் 98 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதேவேளை 16 சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்புக்களில் 69 கிலோ கிராமிற்கும் அதிக உள்நாட்டு கஞ்சாவுடன் 27 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், 8 சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்புக்களில் 88 கிலோ கிராமிற்கும் அதிக ஹசீஸ் போதைப்பொருளுடன் 9 உள்நாட்டு சந்தேகநபர்கள் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து இளம் தலைமுறையினரை மீட்ப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை வெற்றி பெறச் செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவின் ஒருங்கிணைப்பு மற்றும் கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமைத்துவத்தின் கீழ் இவ்வாண்டிலும் இலங்கை கடற்படை அதன் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04