கொழும்பு துறைமுக நகரம் ; கடலில் இருந்து எழும் எதிர்கால நகரம்

31 Dec, 2021 | 07:28 PM
image

கொழும்பு, (சின்ஹுவா) கொழும்பு துறைமுக நகரில் செயற்கையான தங்கக் கடற்கரை மீது இலங்கையரான சஞ்சீவ அல்விஸ் துறைமுக நகரில் கட்டியெழுப்பப்படவிருக்கும் நிதியியல் மையத்தைப் போன்ற மாதிரி மணற்கோட்டையொன்றை வெகு பிரயாசத்துடன் நிர்மாணித்துக்கொண்டிருந்தார். கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று இலங்கைச் சிறுவர்கள் அல்விஸின் இந்த கைவண்ணத்தை அவதானித்துவிட்டு அவருடன் சேர்ந்து மணற்கோட்டையை கட்டியெழுப்ப ஓடோடி வந்து சேர்ந்துகொண்டார்கள். 

கடலில் இருந்து எழும் மணற்கோட்டையைப் பற்றி அல்விஸ் கூறியவற்றை அவதானித்த வண்ணமே   ஒரு சிறுமி  " கடலில் இருந்து ஒரு நகரத்தை கட்டியெழுப்ப முடியுமா ?" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள். கடலில் இருந்து எழும் இந்த நகரம் எதிர்காலத்தில் என்ன மாதிரி தோற்றமளிக்கும் ? இது அவளின் அடுத்த கேள்வி.

சைனா ஹார்பர் எஞ்சினியறிங் கம்பனியின் கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தில் அல்விஸ் ஐந்து வருடங்களாக ஒரு திட்டப் பொறியியலாளராக பணியாற்றிவருகிறார்.

கொழும்பின் மத்திய வர்த்தக மாவட்டத்துக்கு அண்மையாக அமைந்திருக்கும் கொழும்பு துறைமுக நகரம் மேற்கூறப்பட்ட சீனக்கம்பனியினாலும் இலங்கை அரசாங்கத்தினாலும் கூட்டாக நிர்மாணிக்கப்பட்டுவரும்   பெரும் எடுப்பிலான ஒரு முதலீட்டுத் திட்டமாகும். மண்டலமும் பாதையும்( Belt and Road Initiative ) செயற்திட்டத்தை  கூட்டாக கட்டியெழுப்புவதில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு  இந்த  துறைமுக நகரத்திட்டம் ஒரு வகைமாதிரியானதாகும்.

துறைமுக நகரத்திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அதன் நிர்மாணத்தை அல்விஸ் அவதானித்துவருகிறார். 1980 களில் மின்சார பொறியியல் மற்றும் இயந்திரமயமாக்கலை கற்றுக்கொள்வதற்காக அல்விஸ் சீனாவுக்கு சென்றிருந்தார்.சிங்ஹுவா பல்கலைக்கழகத்தில் அவர் 6வருடங்கள் பயின்றார்.

" எனது சொந்த நாடு துறைமுக நகரம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு சீனாவிடமிருந்து நான் பெற்ற அறிவைப் பயன்படுத்தி பங்கேற்பதில் மிகவும் பெருமையடைகிறேன்" என்று அல்விஸ் கூறினார்.

நிர்மாணத்தின் ஆரம்பக்கட்டத்தில் கொழும்பு அரசாங்கத்தின் பொருத்தமான திணைக்களங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதே அவரின் பணியாக இருந்தது.

நடைப்பாலம்

இடர்பாடுகள் இல்லாத முறையில் திட்டம் ஒழுங்கமைவாக முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்வதற்கு நிர்மாணப்பகுதியில் குறைந்தது இரு நீர் வளங்கள் தேவைப்பட்டது.அல்விஸ் எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக இறுதியில் அந்த வளங்கள் கிடைத்தன." இப்போது நாம் செய்பவை எல்லாம் இலங்கையின் எதிர்காலத்துக்கான ஒரு மாதிரியாகும்" என்று அவர் சொன்னார்.

கடலில் இருந்து நிலத்தை மீட்டெடுக்கும் பணி 2019 ஜனவரியில் பூர்த்தி செய்யப்பட்டது.

" நில மீட்புத் திட்டத்தின் பூர்த்தி துறைமுக நகரத்திட்டத்தின் ஒட்டுமொத்த நிர்மாணத்தில் செய்யப்பட்ட முன்னேற்றத்தை மாத்திரமல்ல,உலக அரங்கில் சீனாவின் தீர்வுகளினதும்  தொழில்நுட்பங்களினதும் பறைசாற்றுதலையும் குறித்து குறித்து நிற்கிறது " என்று சைனா ஹார்பர் எஞ்சினியறிங் கம்பனியின் கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தின் பிரதி திட்ட முகாமையாளர் ஷெங் ஹாவோ கூறினார்.

மணற்கோட்டை கட்டும் பொறியியலாளர் அல்விஸ்

நில மீட்பு பூர்த்தியை அடுத்து தொடர்ச்சியாக பல புதிய வசதிகள் நிர்மாணிக்கப்பட்டன.அவற்றில் ஒரு மத்திய பூங்கா,செயற்கை கடற்கரை, விளையாட்டு பயிற்சி நிலயம்,உல்லாசப்படகுத் துறை மற்றும் நடைப்பாலம் ஆகியவையும் அடங்கும்.

கொழும்பு துறைமுக நகரம் எமது நாட்டுக்கு எதிர்கால முன்னேற்றம் குறித்து மிகவும் நம்பிக்கையூட்டுகின்ற ஒரு திட்டமாகும் என்று இலங்கை தேசிய நூலக தலைவர் சொனால குணவர்தன கூறினார்.

செயற்கை கடற்கரையில்  மக்கள் படகுகளில் பொழுதைக் கழிக்கிறார்கள்.

இளம் புகைப்படக் கலைஞரான தாரக சமரசிங்க," கடலில் இருந்து நிலம் மீட்கப்பட்ட பிறகு எமது பிராந்தியம் விஸ்தரிக்கப்பட்டது குறித்து நான் பெருமையடைகிறேன். இந்த நிலமீட்பு எமது சிறுவர்களின் எதிர்காலத்தின் மிகவும் முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும் " என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ( ராங் லூ எழுதியது).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்தின் புதிய சீர்திருத்தங்களும் உள்வீட்டு சவால்களும்

2025-04-23 17:50:20
news-image

புதுப்பிக்கப்பட்ட கூட்டணி ; அண்ணா தி.மு.க.வுக்கு...

2025-04-23 09:36:25
news-image

மூன்று மாத கால அவகாசத்தில் இலங்கை...

2025-04-22 14:14:15
news-image

ஒரு துறையைத் தவிர ஏனைய சகல...

2025-04-22 12:13:58
news-image

முதுமையில் இளமை சாத்தியமா?

2025-04-22 09:36:33
news-image

அடுத்த பாப்பரசர் யார் ? பிரான்சிஸின்...

2025-04-21 17:34:19
news-image

பாப்பரசரின் மறைவுக்குப் பின் நடைபெறப்போவது... !...

2025-04-21 16:23:25
news-image

புதிய குடிவரவு ‘ஒடுக்கு முறை’ சட்டங்களும்,...

2025-04-20 21:24:37
news-image

தமிழ்த் தேசியவாதத்தின் பெயரில் எதிர்காலத்தை உள்ளூராட்சி...

2025-04-20 17:29:55
news-image

என்.பி.பி.யின் கனவு பலிக்­குமா?

2025-04-20 15:53:10
news-image

ஈஸ்டர் தாக்­குதல் : வில­குமா மர்­மங்கள்?

2025-04-20 15:52:01
news-image

இந்­தி­யாவின் மூலோ­பாய மாற்றம்

2025-04-20 15:28:07