நூற்றுக்கு 12 சதவீதமானோருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டிருக்கலாம் - சுகாதார மேம்பாட்டு பணியகம் 

Published By: Digital Desk 4

31 Dec, 2021 | 07:05 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் ஒமிக்ரோன் பிறழ்வு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இலங்கையில் நூற்றுக்கு 12 சதவீதமானோருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளது என்று எதிர்வு கூற முடியும்.

Articles Tagged Under: வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ | Virakesari.lk

இது ஒமிக்ரோன் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது என்பதற்கான சிறந்த சாட்சியாகும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் சுமார் 170 மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 41 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் நூற்றுக்கு 12 சதவீதமானோருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளது என்று எதிர்வு கூற முடியும். நாட்டில் ஒமிக்ரோன் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.

அதே வேளை மூன்றாம் கட்ட தடுப்பூசியின் முக்கியத்துவமும் இதன் மூலம் வெளிப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் டெல்டாவுடன் ஒப்பிடும் போது ஒமிக்ரோன் வைரஸால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறைவாகும் என்று சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளானால் பாதிப்படையக் கூடிய சந்தர்ப்பம் அதிகமாகும்.

எனவே எந்த வைரஸான இருந்தாலும் ஆபத்தை உணர்ந்து , சுகாதார தரப்பினரால் வெளியிடப்படுகின்ற பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55