இரு மாதங்களில் டெங்கு நோய் இரு மடங்காக அதிகரிப்பு - விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர

Published By: Vishnu

31 Dec, 2021 | 03:41 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த இரு மாதங்களுக்குள் டெங்கு நோய் பரவல் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த 10 ஆண்டுகளுக்குள் 2017 ஆம் ஆண்டு டெங்கு பரவல் தீவிரமாகக் காணப்பட்டது. 2017 இல் சுமார் 180 000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். அதன் பின்னர் இவ்வாண்டில் மீண்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

கடந்த நவம்பர் மாதத்தில் 4,561 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். எனினும் டிசம்பரில் இந்த எண்ணிக்கை 8,740 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் மூன்றில் இரண்டு மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களாவர். 

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது மரணங்களின் எண்ணிக்கை கனிசமானளவு அதிகரித்துள்ளது. எவ்வாறிருப்பினும் இது ஆரம்ப காலங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாகும். 

கொவிட் உள்ளிட்ட வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு நோய் ஏற்பட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படாது. எனினும் கர்பிணிகள் டெங்கு நோய்க்கு உள்ளாவது பாதிப்புக்களை ஏற்படுத்தும். எனவே கர்பிணிகள் இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09