பதுளை ஹல்துமுல்லையில் “கெப்” ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஐந்து பேர் படுகாயங்களுடன் ஹல்துமுல்லை மற்றும் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து (இன்று) 31-12-2021 இடம்பெற்றுள்ளது. 

பெல்மடுல்லையிலிருந்து நுவரெலியாவிற்கு சென்று கொண்டிருந்த “கெப்” ரக வாகனம், பாதையை விட்டு விலகி, பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயங்களுக்குள்ளான 5 பேரில், நான்கு பேர் ஹல்துமுல்ல அரசினர் வைத்தியசாலையிலும், ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து ஹல்துமுல்ல பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.