யூனியன் அஷ்யூரன்ஸ் தனது திருகோணமலை பிராந்திய அலுவலகத்தை 2016 செப்டெம்பர் 15 ஆம் திகதி மெருகேற்றம் செய்யப்பட்ட கிளையாக மெருகேற்றம் செய்திருந்தது.

நாடு முழுவதும் முழுமையாக செயலாற்றல் திறன் வாய்ந்த கிளைகளை கொண்டிருப்பது எனும் நிறுவனத்தின் இலக்குக்கு அமைவாக இந்த புதிய கிளை அமைந்துள்ளது.

பருத்தித்துறைக்கிளை, பெருமளவு வாகன தரிப்பிட வசதிகளுடன் மு.ப. 8.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை திறந்திருக்கும். ஆயுள் காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கக்கூடிய பகுதிகள், ஊழியர்களுக்கான பயிற்சி நிலையங்கள் மற்றும் ஏனைய முக்கியமான வாடிக்கையாளர் வசதிகள் போன்றவற்றை எவ்வேளையிலும் வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸின் கிளை அலுவலகங்களின் மூலமாக தனிநபர்கள் மற்றும் வியாபாரங்கள் ஆகியவற்றுக்கு பெருமளவு ஆயுள் காப்புறுதி தீர்வுகள் வழங்கப்படுகின்றன. கிளை தகவல் தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளதுடன் இதன் மூலம் பிரத்தியேக நிதி ஆலோசகர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் டப்லெட்கள் போன்ற சேவைகளை வழங்கக்கூடிய வகையில் காணப்பட்டது.

மெருகேற்றம் செய்யப்பட்டுள்ள கிளை, இல. 357, பிரதான வீதி, பருத்தித்துறை எனும் முகவரியில் அமைந்துள்ளது. நாட்டில் 28 வருட கால இடைவிடாத காப்புறுதி சேவைகளை வழங்கும் முதாலவது தனியார் நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கிறது.

கம்பனியின் செயற்பாடுகளை உறுதியான ஊழியர் செயற்குழு, வலிமையான மூலதன இருப்பு மற்றும் மீள் உறுதி செய்யப்பட்ட காப்புறுதிதாரர்களுடனான பங்காண்மைகள் போன்றன வலிமைப்படுத்தியுள்ளன. “நம்பிக்கை” எனும் உறுதி மொழிக்கமைவாக, வெளிப்படையாகவும், வசதியாகவும் மற்றும் மதிப்புடன் சகல பங்காளர்களுக்கும் கடந்த 28 வருட காலமாக யூனியன் அஷ்யூரன்ஸ், சேவைகளை வழங்கி வருகிறது.