நீண்ட விடுமுறைகளை கொண்ட புதிய ஆண்டு

31 Dec, 2021 | 01:27 PM
image

(கே.மொரின்)

2022 ஆம் ஆண்டு நாட்காட்டியின் வார இறுதிகளில் நீண்ட பொது விடுமுறைகள் உள்ள ஆண்டாக  காணப்படுகிறது.

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழு பொது விடுமுறைகள் வந்துள்ளன. 

ஜனவரி, ஏப்ரல், மே மற்றும் நவம்பர் மாதங்களில் பௌர்ணமி போயா விடுமுறைகள் வெள்ளி அல்லது திங்கட்கிழமைகளில் விழுகின்றன. 

தைப்பொங்கல், சுதந்திரதினம் மற்றும் தீபாவளி ஆகியவை வெள்ளி அல்லது திங்கட்கிழமைகளில் காணப்படுகிறது.

முறையே சிங்களப் புத்தாண்டு, போயா மற்றும் பெரிய வெள்ளி ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக வருவதால் ஏப்ரல் மாதத்தில் ஐந்து நாட்கள் நீண்ட வார விடுமுறைகள் உள்ளன.

செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர், மே தினம், ஹஜ், மே தினம் மற்றும் கிறிஸ்துமஸ் தினங்களின் போயா விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் விழுந்துள்ளன. வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் விடுமுறை விடப்பட்டுள்ளது

செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பொது விடுமுறைகள் வரும் போதெல்லாம் தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை எடுப்பதாக அறியப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right