மக்கள் வங்கி LankaPay தேசிய அட்டைத் திட்டத்தினை வழங்குபவர்களாகவும் தம்மகத்தே வைத்திருப்பவர்களாகவும் திகழும் முதலாவது வங்கி

By T. Saranya

31 Dec, 2021 | 01:06 PM
image

மக்கள் வங்கி LankaPay National Card Scheme உடன் இணைந்ததன் மூலம் இத்திட்டத்தினை வழங்குபவர்களாகவும் வைத்திருப்பவர்களாகவும் திகழும் முதலாவது வங்கியாக விளங்குகின்றது. 

மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் திரு. ரஞ்சித் கொடிதுவக்கு மற்றும் LankaClear  இன் பொது முகாமையாளர் பிரதம நிறைவேற்று அதிகாரியான சன்ன டி சில்வா ஆகியோருக்கு இடையில் இக்கூட்டிணைவுக்கான ஒப்பந்தம் அண்மையில் மக்கள் வங்கியின் தலைமைக் காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது. 

மக்கள் வங்கியின் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர்(கொடுப்பனவுகள் மற்றும் டிஜிட்டல்) கே.பீ. ராஜபக்ஷ மற்றும் அட்டைகள் பிரிவுத் தலைவர் ஜயனாத் டயஸ், LankaClear  இன் பிரதி பொது முகாமையாளர் - நிதிப்பிரிவு – ரசிக கலப்பத்தி மற்றும் முகாமையாளர் - வணிக அபிவிருத்தி – சஷிகா கௌஷல்யா மற்றும் இலங்கைக்கானJCB International இன் ஆலோசகர் - லக்ஷ்மன் லியனகே ஆகியோரும் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டனர். 

LankaPay National Card Scheme  எனும் இத்திட்டம் சர்வதேச தரத்தை கடைபிடிக்கும் இலங்கையின் உள்நாட்டு அட்டை திட்டமாகும். இத்திட்டமானது மத்திய வங்கியின் வழிகாட்டுதல் மற்றும் அங்கிகாரத்தின் கீழ் JCB International உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஜப்பானை தலைமையிடமாகக் கொண்ட ஆறு முன்னணி சர்வதேச அட்டைத் திட்டங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. 

மக்கள் வங்கியானது பிரீமியம் உரிமம் பெற்ற வணிக வங்கியாகவும், நாடளாவிய ரீதியில் 741 கிளைகளையும் மற்றும் சேவை நிலையங்களையும் உள்ளடக்கிய மிகப் பெரிய வங்கியாகவும் தடம் பதித்துள்ளது. 

மேலும், நாட்டில் 14.0 மில்லியனுக்கும் அதிகமான மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தினையும் கொண்டுள்ளது. 1962ஆம் ஆண்டு மக்கள் வங்கிச் சட்டம் இல. 29 இன் கீழ் நிறுவப்பட்ட வங்கியானது Fitch Ratings Lanka Ltd இனால் வழங்கப்பட்ட “AA - (lka/ Stable)” என்ற தேசிய நீண்ட கால மதிப்பீட்டை தம்மகத்தே தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right