முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை வெளிநாடு செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

குறித்த உத்தரவை கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று பிறப்பித்துள்ளார்.

சீனாவில் இடம்பெறவுள்ள பிராந்திய பாதுகாப்பு மாநட்டில் கலந்துக்கொள்வதற்காக எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்குமாறு கோத்தபாய ராஜபக்ஷவின் சட்டத்தரணி கடந்த 30 ஆம் திகதி கோரிக்கை விடுத்திருந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆம் திகதி எவன்காரட் விசாரணை தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கியதோடு, வெளிநாடு செல்ல தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.