(செய்திப்பிரிவு)
இலங்கைக்கு எதிராகத் தடைகளை விதிக்குமாறு சீன அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் நோக்கில் சீவின் பயோடெக் நிறுவனத்தின் உயரதிகாரிகள் ஷன்டொங் மாகாண அரசை நாடியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் பரிசோதனை செய்யப்பட்டு அதில் தீங்கேற்படுத்தும் பக்றீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்ட உரத்திற்காக சீனாவிலுள்ள சீவின் பயோடெக் குரூப் கம்பனி லிமிடெட் நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது.
தாமதமாகவேனும் சீன நிறுவனத்திற்குரிய கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்த பின்னரும், இவ்விவகாரத்தினால் தமது நிறுவனத்தின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை முன்னிறுத்தி சீவின் பயோடெக் நிறுவனம் இலங்கைக்கு எதிரான அதன் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துவருவதாக ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.
அதன்படி இலங்கைக்கு எதிராகத் தடைகளை விதிக்குமாறு சீன அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் நோக்கில் சீவின் பயோடெக் நிறுவனத்தின் உயரதிகாரிகள் ஷன்டொங் மாகாண அரசை நாடியுள்ளனர்.
சீவின் பயோடெக் நிறுவன உயரதிகாரிகளுக்கும் இலங்கையைச் சேர்ந்த தரப்பிற்கும் இடையிலான குறுந்தகவல் உரையாடல்கள், சீன நிறுவனமானது இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எத்தகைய எல்லைவரை செல்கின்றது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதாகவும் அந்நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையை நம்பவேண்டாம் என்றும் இலங்கைக்கு எந்தவொரு பொருட்களை அனுப்புவதாயினும், அதற்கு முன்னர் முற்கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளுமாறும் சீனக்கம்பனிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக சீவின் பயோடெக் நிறுவன உயரதிகாரி தெரிவித்திருக்கிறார்.
அதுமாத்திரமன்றி இதுகுறித்து மேலும் பல சர்வதேச கட்டமைப்புக்களிடம் முறைப்பாடு செய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலைக்கான மட்டுப்பாடுகளை விதிக்குமாறு சீன அரசாங்கத்தை வலியறுத்தியிருப்பதாகவும் மற்றொரு அதிகாரி கூறியிருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM