வர்த்தகரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி வாகனம் கொள்ளை

By T Yuwaraj

30 Dec, 2021 | 01:37 PM
image

(எம்.மனோசித்ரா)

கம்பஹா - உணகஹாதெனிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி , அவரது கெப் ரக வாகனத்தை மூவர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை காலை மூரடங்கிய குறித்த கொள்ளைக்கார கும்பல் உணகஹாதெனிய பிரதேசத்திற்குச் சென்று துப்பாக்கியைக் காண்பித்து குறித்த வர்த்தகரை கொன்று விடுவதாக அச்சுறுத்தி அவரது வாகனத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும் குறித்த கொள்ளையர்கள் வாகனத்தில் வருகை தந்தார்களா அல்லது நடந்து வந்துள்ளார்களா என்பது கண்டு பிடிக்கப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் தகவல்கள் கிடைத்தவுடன் நிட்டம்புவ பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக டி சில்வா மற்றும் அத்தனகல்ல மேலதிக பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் தயானந்த ஆகியோரின் ஆலோசனை மற்றும் கண்காணிப்பின் கீழ் நிட்டம்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கே.டீ.பி.அபேரத்ன தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right