நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை அமலா நடிப்பில் தயாராகி இருக்கும் 'கணம்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சூர்யா தன் இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'கணம்'. இதில் 'எங்கேயும் எப்போதும்' படப் புகழ் நடிகர் சர்வானந்த் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ரிது வர்மா நடித்திருக்கிறார்.
இவர்களுடன் நடிகர்கள் ரமேஷ் திலக், சதீஷ், நாசர், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கியமான வேடத்தில் மூத்த நடிகை அமலா நடித்திருக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,''அம்மாவின் பாச உணர்வும், அறிவியல் புனைவும் ஒன்றாக இணைந்து கிராபிக்ஸ் படைப்பாக கணம் உருவாகியிருக்கிறது. மூத்த நடிகை அமலா இருபத்தைந்து ஆண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடித்திருக்கிறார். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அவர்களது தாயைப் பற்றிய நினைவு உணர்வு பூர்வமாக எழும்'' என்றார்.
'கணம்' , டைம் ட்ராவல் எனப்படும் நேர சுழற்சியை மையப்படுத்திய கதை என்பதாலும், இறந்த தாய் அன்பை நாயகன் நேர சுழற்சியின் மூலம் மீண்டும் தாயன்பை பெறும் முயற்சியைப் பற்றிய படம் என்பதாலும், பார்வையாளர்களிடத்தில் கணம் கனமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM