இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் பால் மாவின் விலை 60 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விலை திருத்தத்துக்கு இணங்க 1 கிலோ பால் மா பாக்கெட்டின் புதிய விலை 1,345 ரூபாவாகவும், 400 கிராம் பால்மா பாக்கெட்டின் புதிய விலை 540 ஆகவும் அதிகரிக்கப்படும்.

உலக சந்தையில் பால் மாவின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதால், தற்போதைய விலையில் தொடர்ந்து பால் மாவை விநியோகிக்க முடியாது என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.