ஊவா பரணகம பிரதேசத்தின் பனாகொட  என்ற இடத்தில், கித்துள் பூ வெட்டச் சென்ற நபர் கித்துள் மரத்தில் ஏறும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிணற்றிலிருந்து இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரியின் சடலம் மீட்பு | Virakesari .lk

ஊவா பரணகம, பனாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே நேற்று (28) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

கித்துள் மரங்களை வெட்டச் சென்றவர் திரும்பி வராத நிலையில், அவரை தேடி பார்த்த பொழுது, குறித்த கித்துள் மரத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனா்.

சம்பவம் தொடர்பில் ஊவா பரணகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது.