(நெவில் அன்தனி)
பங்களாதேஷில் நடைபெற்ற மத்திய ஆசிய சவால் கிண்ண இருபாலாருக்குமான கரப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை ஆடவர் பிரிவில் சம்பியனானதுடன் மகளிர் பிரிவில் 3 ஆம் இடத்தைப் பெற்றது.
பங்கபந்து சவால் கிண்ணத்துக்காக நடைபெற்ற ஆடவர் பிரிவில் இலங்கை தோல்வி அடையாத அணியாக சம்பியன் பட்டத்தை சூடியது.
மேலும் மத்திய ஆசிய வலய கரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை சம்பியனானது இதுவே முதல் தடவையாகும்.
பங்களாதேஷுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3 - 0 என்ற செட்கள் அடிப்படையில் இலங்கை வெற்றிபெற்று பங்கபந்து சவால் கிண்ணத்தை சுவீகரித்தது.
பெரும் பரபரப்பை தோற்றுவித்த முதலாவது செட்டில் இரண்டு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்றவண்ணம் இருக்க ஆட்டம் சமநிலை முறிப்புவரை நீடித்தது. இதில் 28 - 26 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை வெற்றிபெற்றது.
அடுத்த இரண்டு செட்களிலும் சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடிய இலங்கை முறையே 25 - 20, 25 - 20 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
இதேவேளை, பங்கமாதா சவால் கிண்ணத்துக்காக நடைபெற்ற மகிளிர் பிரிவுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் கிர்கிஸ்தானை 3 நேர் செட்களில் வெற்றிகொண்ட இலங்கை 3ஆம் இடத்தைப் பெற்றது.
கடுமையாக மோதிக்ககொள்ளப்பட்ட இப் போட்யின முதலாவது செட்டில் 26 - 24 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை வெற்றிபெற்றது.
தொடர்ந்து 2ஆவது திறமையாக விளையாடிய இலங்கை 25 - 16 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்றது.
3 ஆவது செட்டில் மீண்டும் சவாலை எதிர்கொண்ட இலங்கை கடைசிக் கட்டத்தில் நிதானம் கலந்த திறமையுடன் விளையாடிய 25 - 22 என வெற்றிபெற்று 3ஆம் இடத்தை உறுதிசெய்துகொண்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM