பேய், பூத­மாக என்னை காண்­பிக்க முயற்சி : பேச்சை சரி­யாக மொழி­பெ­யர்க்­க­வில்லை என்­கிறார் முதல்வர் விக்கி 

By Priyatharshan

03 Oct, 2016 | 09:32 AM
image

என்னைப் பேயா­கவும் பூத­மா­கவும் தகாத மனிதப் பிற­வி­யா­கவும் சித்­தி­ரிப்­ப­தற்கு முயற்­சிக்­கின்­றனர். நான் சொல்­லா­ததை எல்லாம் சொல்லி என்னை வைவது மன­ வ­ருத்­தத்தைத் தரு­கின்­றது. முக்­கி­ய­மாக தெற்கில் தேர்­தலில் தோற்ற சிலர், சிறைத் தண்­ட­னைக்கு இலக்­காக வேண்­டிய சிலர் எம்மை வைத்து அர­சியல் வியா­பாரம் நடத்த முற்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்று வட மாகாண மு­த­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

யாழ்ப்­பாணம் துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற 41 ஆவது தேசிய விளை­யாட்டு விழாவின் நேற்­றைய இறுதி நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

வடக்கு முதல்வர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

நான் ஒரு பேயைப் போலவும் ஒரு வேண்­டா­தவன் போலவும் தெற்கில் சித்­த­ரிக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கிறென். நான் சொல்­லாதை சொன்­ன­தாக சொல்லி பொய்­களை பரப்பி என்னை வேண்­டா­த­வ­னாக சித்­த­ரிப்­ப­துதான் மன­வே­த­னை­யாக இருக்­கி­றது.

ஒரு பிர­தே­சத்தில் கோவிலோ தேவா­ல­யமோ விஹா­ரையோ அமைக்­கப்­ப­டும்­போது அம்­மா­கா­ணத்தின் சட்டத் திட்­டங்­களின் படி அனு­ம­தியைப் பெற­வேண்டும். அப்­ப­டி­யில்­லாமல் இரா­ணு­வத்தின் உத­வி­யுடன் பொது­மக்ளின் இடங்­களில் விஹா­ரை­களை உங்கள் இஷ்­டத்­திற்கு அடா­வடித் தன­மாக அமைக்க வேண்டாம் என்­றுதான் நான் சொன்னேன்.

இது தவறு என்று எனக்கு பட­வில்லை. இதை சரி­யாக யாரும் மொழி­பெ­யர்க்க வில்லை. அதனால் நானே இதை சிங்­க­ளத்தில் சொல்­கிறேன் (விக்­கி­னே­ஸ­ங­வரன்) சிங்­க­ளத்­திலும் உரை­யாற்­றினார்)

தமிழில் பேசும்­போது,

பேச்­சாளர் பட்­டி­யலில் எனது பெயர் முன்பு இடம் பெற்­றி­ருக்­க­வில்லை. இறுதி நேரத்தில் என்­னையும் பேசு­மாறு அழைத்­த­மைக்கு நன்றி கூறு­கின்றேன். ஒரு வேளை தெற்­கிலே என்னை இப்­பொ­ழுது சித்­தி­ரித்துக் காட்டி வரு­வது என்னைத் தகாத ஒரு மனி­த­னாக ஏற்­பாட்­டா­ளர்கள் மனதில் எடுத்துக் காட்­டி­யி­ருக்கக் கூடும். நான் வழக்­க­மாக பேச்­சுக்­களை எழு­தியே வாசிப்பேன்.

என்னைப் பேயா­கவும் பூத­மா­கவும் தகாத மனிதப் பிற­வி­யா­கவும் சித்­தி­ரிப்­ப­தற்கு முன்னர் நான் அண்­மை­யிலே பேசிய பேச்சை சிங்­க­ளத்­திலோ ஆங்­கி­லத்­திலோ முறை­யாகச் சரி­வர மொழி­பெ­யர்த்து வாசித்து விட்டு, என்னை விமர்­சித்­தி­ருந்தால் அதற்­கான பதிலைத் தந்­தி­ருக்க முடியும். ஆனால் நான் சொல்­லா­ததை எல்லாம் சொல்லி என்னை வைவது மன­வ­ருத்­தத்தைத் தரு­கின்­றது.

1958ல் சென­வி­ரத்ன எனும் ஒரு சிங்­களச் சகோ­த­ரரை வெட்டித் துண்டு துண்­டாக்கி மீன் பெட்­டி­களில் அடைத்து அனுப்­பி­ய­தாக ஒரு கட்டுக் கதை கட்டி விடப்­பட்­ட­தால்த்தான் பல தமிழ் மக்கள் அழிக்­கப்­பட்­டார்கள். சொத்­துக்கள் சூறை­யா­டப்­பட்டு தீயி­டப்­பட்­டன. அவ்­வாறு அழிக்­கப்­பட்ட பின்­னர்தான் அந்தச் செய்தி பொய் என்று தெரி­ய­வந்­தது.

ஆனால் அழிவு அழி­வுதான். கடைசி நேரத்தில் என்னைப் பேச அழைத்­ததால் அது பற்­றிய முழு விப­ரங்­க­ளையும் என்னால்த் திரட்ட முடி­ய­வில்லை. ஆகவே பொய் புரட்­டுக்­களை நம்பி அநி­யா­ய­மாக மக்­க­ளி­டையே பிரி­வி­னை­க­ளையும் முரண்­பா­டு­க­ளையும் வெறுப்­பு­ணர்ச்­சி­க­ளையும் ஏற்­ப­டுத்­தாது இருப்போம்.

முக்­கி­ய­மாக தெற்கில் தேர்­தலில் தோற்ற சிலர், சிறைத் தண்­ட­னைக்கு இலக்­காக வேண்­டிய சிலர் எம்மை வைத்து அர­சியல் வியா­பாரம் நடத்த முற்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அவர்கள் வியா­பா­ரத்­துக்­கா­வது நான் அவர்­க­ளுக்கு பயன்­பட்­டுள்ளேன் என்­பதில் எனக்குத் திருப்­திதான்.

தேசிய விளை­யாட்டு நிகழ்­வு­களும் தட­க­ளப்­போட்­டி­களும் ஒவ்­வொரு வரு­டமும் இலங்­கையின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் முன்­னெ­டுக்­கப்­பட்டு அந்­தந்தப் பிர­தே­சங்­களில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்ற வகையில் இந்த 42ஆவது தேசிய விளை­யாட்டு விழா யாழ் துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­றி­ருப்­பது எமக்கு பெருமை அளிக்­கின்­றது.

எனினும். பல விளை­யாட்­டுக்­களை நடத்த எமக்கு வச­திகள் இல்லை. பிற­மா­கா­ணங்­க­ளி­லத்தான் அவை நடாத்­தப்­ப­டு­கின்­றன. வட­மா­கா­ணத்தில் தேசிய விளை­யாட்டு நடை­பெ­று­கின்­றது என்று கூறு­வது எமக்குப் பெருமை தரும் அதே வேளையில் நீச்சல் போன்ற பல போட்­டி­களை எம்மால் நடத்த முடி­யா­தி­ருப்­பதால் மன­வே­தளை அடை­கின்றோம். வெகு­வி­ரைவில் வட­மா­கா­ணத்­திற்­குள்­ளேயே கிளி­நொச்­சியில் சகல போட்­டி­களும் நடாத்­தப்­பட்டு தேசிய விளை­யாட்டு விழா மீண்டும் இங்கு நடை­பெற எங்கள் மாண்­பு­மிகு ஜனா­தி­பதி வழி சமைப்பார் என்று எதிர்­பார்க்­கின்றேன்.

42 ஆவது தேசிய விளை­யாட்டுப் போட்­டி­களில் சிலர் சாத­னை­யா­ளர்­க­ளாக மாற்­றப்­பட்­டுள்­ளீர்கள். பலர் போட்­டி­களில் வெற்­றி­யீட்டி பதக்­கங்­க­ளையும் பத்­தி­ரங்­க­ளையும் பெற்று மகிழ்ச்சித் திழைப்பில் அமர்ந்­தி­ருக்­கின்­றீர்கள். உங்கள் அனை­வ­ரையும் வாழ்த்தி மேலும் மேலும் வெற்­றி­களை நீங்கள் ஒவ்­வொ­ரு­வரும் பெற வேண்டும் என்று பிரார்த்­திக்­கின்றேன்.

இவ்­வ­ருட 42வது விளை­யாட்டு நிகழ்­வு­களில் கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் தெல்­லிப்­பளை மகா­ஜனாக் கல்­லூரி மாணவி ஜெக­தீஸ்­வரன் அனித்தா 3.45 மீற்றர் உய­ரத்தை தாண்டி இலங்­கையில் தேசிய மட்ட சாத­னை­யா­ள­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருப்­பது எமக்கு பெரு­மை­களைத் தேடித் தந்­துள்­ளது. இவர் ஓரிரு மாதங்­க­ளுக்கு முன்னர் சிரேஷ்ட மெய்­வல்­லுனர் போட்­டி­யொன்றில் கலந்து கொண்டு 3.35 மீற்றர் உய­ரத்தைத் தாண்டி சாதனை படைத்த போதும் இவரின் சாதனை சில மாதங்­க­ளுக்குள் இரா­ணுவ வீராங்­கனை கசிந்தா நிலுக்‘­ஷி­யினால் 3.40 மீற்றர் உய­ரத்தை தாண்டி முறி­ய­டிக்­கப்­பட்­டது. எனினும் தொடர் பயிற்­சியும் கடின உழைப்பும் இன்று அனித்­தாவை 3.45 மீற்­ற­ருக்கு உயர்த்தி தேசிய மட்ட சாத­னையை மீண்டும் கைப்­பற்றிக் கொள்ள வைத்­தி­ருக்­கின்­றது.

மகா­ஜனாக் கல்­லூரி என்­பது போரின் பின்னர் புத்­துயிர் பெற்ற ஒரு நீண்ட வர­லாற்றைக் கொண்ட கல்­லூரி. இங்கு எது­வித வளங்­களும் கிடை­யாது. போரின் வடுக்­க­ளாக கட்­டிட இடி­பா­டு­களும், சீமேந்து கற்­களும், ஓட்டுத் துண்­டு­களும் பரவிக் கிடக்­கின்ற மைதா­னமே இவர்­களின் மூல­தனம். பயிற்­சிக்­கான உப­க­ர­ணங்கள் இல்லை. விளை­யாட்டு மைதா­னங்கள் சீராக இல்லை.

இந் நிலை­யிலும் அனித்­தாவின் கடின உழைப்பும் விடா முயற்­சியும் அவரை சாத­னை­யா­ள­ராக மாற்­றி­யி­ருக்­கின்­றது. இதே போன்று வட­மா­கா­ணத்தைச் சேர்ந்த பலர் வெற்­றி­யா­ளர்­க­ளா­கவும் அதில் சிலர் சாத­னை­யா­ளர்­க­ளா­கவும் மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்று கேள்­விப்­ப­டு­கின்றேன். வெற்­றி­யீட்­டி­ய­வர்­களின் பட்­டியல் எமது கைக்கு நேர­கா­லத்­துடன் கிடைக்­கப்­பெ­றா­மையால் உங்­களைத் தனித்­த­னி­யாக வாழ்த்த முடி­ய­வில்லை. எனினும் உங்கள் அனை­வ­ரையும் இத்­த­ரு­ணத்தில் மன­மார வாழ்த்தி உங்கள் வாழ்வு வள­முள்­ள­தாக அமைய இறை­வனைப் பிரார்த்­திக்­கின்றேன்.

இன்­றைய இந் நிகழ்வில் ஜனா­தி­பதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்­பித்­தமை அனை­வ­ரையும் மகிழ்ச்­சியில் ஆழ்த்­து­கின்­றது. கிரா­மியச் சூழலில் பிறந்து கிரா­மிய சூழலில் வளர்ந்த இலங்­கையின் தலைக் குடி­மகன் என்ற வகையில் அவர் மக்கள் யாவ­ரையும் மதிக்­கின்ற ஒரு உய­ரிய பண்பை தன்­ன­கத்தே கொண்­டி­ருக்­கின்றார். அதன் பிர­தி­ப­லிப்­பாக அடி­மட்ட நிகழ்­வுகள் பல­வற்றில் கலந்து கொண்டு அவற்றை ஊக்­கப்­ப­டுத்தி வரு­கின்றார். மக்­க­ளுக்குச் சகல விதங்­களில் வலு­வூட்­டியும் வரு­கின்றார்.

எமது சார­ணர்கள் தங்­க­ளுக்கு ஒரு கட்­டிடம் அமைக்க வேண்­டி­யுள்­ளது என்று அண்­மையில் கோரிய போது உடனே அதற்­கான உத­வியைப் பெற்றுக் கொடுக்க முன்­வந்தார். அந்த வகையில் இன்று இங்கு வந்து இந்த நிகழ்­வு­களில் கலந்து கொண்டு உங்கள் அனை­வ­ரையும் உற்­சா­கப்­ப­டுத்தி முன்­னேறத் தூண்­டுதல் அளித்து வரும் அவரின் வர­வுக்கு உங்கள் சார்­பாக அவ­ருக்கு எனது மன­மார்ந்த நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன்.

எமது வேறு­பட்ட மக்­களை ஒன்று படுத்த விளை­யாட்­டுக்கள் உதவி புரி­கின்­றன. மொழித் தடங்கல் எம்மைப் பிரிப்­ப­தையும் நாம் காண்­கின்றோம். சகோ­தர மொழியில் பாண்­டித்­தியம் பெறா­ததால் பல விட­யங்­களை நாம் மனம் விட்டு எமது சகோ­தர இனங்­க­ளுடன் பேச முடி­யாமல் இருக்­கின்­றது. நான் சிறு­வ­னாக இருந்த போது ஆங்­கி­லமே மாணவ மொழி­யாகக் கல்­லூ­ரிகள் பல­வற்றுள் திகழ்ந்­தது. ஒரு வேளை முன்­னணிப் பாட­சா­லை­களில் மட்டும் அந்­நிலை நில­வி­யதோ என்றால் அப்­ப­டியும் இல்லை. பல தூரப்­பி­ர­தேச பள்ளிக் கூடங்­களில் கூட ஆங்­கிலம் தெரிந்­தி­ருந்­தது.

1950களில் மகி­யங்­க­னைக்கு என் தந்­தை­யா­ருடன் ஒரு முறை சென்ற போது அங்­கி­ருந்த ஒரு ஆசி­ரியர் மிக அழ­காக ஆங்­கிலம் பேசி­யது இப்­பொ­ழுதும் என் நினைவில் இருக்­கின்­றது. ஆங்­கி­லத்தில் என் கல்வி யாவற்­றையும் பெற்ற நான் தமிழ் மொழியைப் பயின்ற அதே வேளையில் 1955ம் ஆண்டு சிங்­கள மொழியைப் படிக்க ஆவல் கொண்டு திரு.எல்­லா­வல என்ற எமது றோயல் கல்­லூரி ஆசி­ரி­ய­ரிடம் பயிலத் தொடங்­கினேன். அரி­வரிப் பாடம் எல்லாம் பயின்­றதும் 1956 ஆம் ஆண்டில் சிங்­களம் மட்டும் சட்டம் .பண்­டா­ர­நா­யக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்­டது. ஆகவே இனி நான் சிங்­களம் படிக்க மாட்டேன் என்று இடை நிறுத்­தி­விட்டேன். வடக்கு கிழக்கு மாகாண மக்­களின் பாரம்­ப­ரி­யத்­தையும் மொழி­யையும் அர­சாங்கம் புறக்­க­ணித்­தமை என்னைக் கோபம் அடையச் செய்­தது.

ஆனால் இன்று மும்­மொழித் தேர்ச்சி ஜனா­தி­பதி அர­சாங்­கத்தால் வலி­யு­றுத்தப் பட்டு வரு­கின்­றது. விளை­யாட்டு வீர வீராங்­க­னைகள் ஆங்­கில மொழித் தேர்ச்சி பெற்றால் ஒரு­வருக் கொருவர் சர­ள­மாகப் பேசு­வது மட்­டு­மல்ல உலக அரங்­கிலே நடை­பெறும் விளை­யாட்­டுக்கள் பற்­றிய சகல விட­யங்­க­ளையும் நாம் அறிந்து கொள்ள அது உதவும். புதிய யுக்­திகள், புதிய வழி­மு­றைகள், புதிய பயிற்­சி­மு­றைகள் போன்­ற­வற்றை உட­னேயே அறிந்து கொள்ள ஆங்­கில அறிவு உதவி புரியும்.

அந்த வகையில் இன்று இங்கு வந்து இந்த நிகழ்­வு­களில் கலந்து கொண்டு உங்கள் அனை­வ­ரையும் உற்­சா­கப்­ப­டுத்தி முன்­னேறத் தூண்­டுதல் அளித்­து­வரும் ஜனா­தி­ப­தியின் வர­வுக்கு உங்கள் சார்­பாக மீண்டும் அவ­ருக்கு எனது மன­மார்ந்த நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன்.

இப் பகு­தியில் விளை­யாட்­டுத்­து­றை­களில் சிறந்து விளங்­கு­கின்ற பல இளைஞர், யுவ­திகள் இருக்­கின்ற போதிலும் அவர்கள் தற்­கால நவீன யுக்­தி­களைக் கையாண்டு விளை­யாட்டுத் துறை­களில் முன்­னே­று­வ­தற்­கு­ரிய உள்­ளக விளை­யாட்டு அரங்­குகள், விளை­யாட்டு உப­க­ர­ணங்கள் என்­பன இல்­லாத கார­ணத்­தினால் விளை­யாட்­டு­களில் நவீன விளை­யாட்டு முறை­மை­க­ளையும் உரிய பயிற்­சி­க­ளையும் சரி­யான பயிற்சித் தளங்களில் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளனர். அத்துடன் கடந்த கால நீண்ட போராட்டங்களும் அதன் விளைவாக வீடுகளில் முடங்கிக் கிடந்து காலத்தை கழித்து வந்ததும் இவர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு தடைக்கல்லாக அமைந்து விட்டது. இந்த வகையில் யாழ் மாவட்டத்தில் ஒரு நீச்சல் தடாகத்தை உள்ளடக்கிய உள்ளக விளையாட்டரங்கு ஒன்றை அமைத்துக் கொடுப்பதன் மூலம் இவர்களை நீச்சல், கரப்பந்தாட்டம் போன்ற உள்ளக நிகழ்வுகளில் மேலும் தேர்ச்சி பெற்று போட்டிகளில் அச்ச உணர்வுகள் இன்றி கலந்து கொள்ள வழிவகுக்கும். எனவே இந்த 42வது வருடாந்த விளையாட்டுப் போட்டிகளின் நினைவுப் பரிசிலாக வடபகுதி விளையாட்டு வீரர்களுக்கான நீச்சல் தடாகம் உள்ளடங்கிய ஒரு உள்ளக விளையாட்டு மைதானமான கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தை விரைவில் அமைத்துத் தருவதற்காக வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றேன். உப சபாநாயகர் திலங்க சுமதிபால எமக்கு ஒரு கிரிக்கட் மைதானம் ஒன்றை அமைத்துத் தரப்போவதாக அறிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right