(இராஜதுரை ஹஷான்)
டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடங்கிய 300 கொள்கலன்களை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க அரசாங்கம் உரிய திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
டொலர் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் போதும் அவற்றை துறைமுகத்தில் இருந்து விடுவிக்கும் போது பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளோம்.
இதுவரையிலான காலப்பகுதில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சுமார் 1500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கமடைந்துள்ளன.
தற்போதைய நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடங்கிய 300 கொள்கலன்களை விடுவிக்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. டொலர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு பெற்றுத்தருமாறு வர்த்தகத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கு அரசாங்கம் டொலர் விநியோகித்தால் எதிர்வரும் முதல் காலாண்டுக்கு தேவையான அரிசியை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளோம்.வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதிலும் சிக்கல் நிலை தற்போது தோற்றம பெற்றுள்ளன.
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் போது இறக்குமதியாளர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு வழங்காவிடின் அத்தியாவசிய பொருள் விநியோகத்தில் சிக்கல் நிலை ஏற்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM