பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி டுபாய் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) நடைபெறும் எக்ஸ்போ கண்காட்சியில் கலந்து கொள்ளும் நோக்குடனே பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்களை மேற்கொள்ளிட்டு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2022 ஜனவரி 3 அன்று நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரச தலைவருடன் கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.