ஆபாச கருத்துக்களை வெளியிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய நடவடிக்கை

Published By: Vishnu

29 Dec, 2021 | 02:43 PM
image

(எம்.மனோசித்ரா)

ஆபாசமான வகையில் கருத்துக்களை வெளியிடுவதை தடை செய்து தயாரிக்கப்பட்ட சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி பணிப்புரை விடுத்துள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்ன தெரிவித்துள்ளது.

இன்றைய இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

சிறு வயது பிள்ளைகளின் நலன்கள் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் பெண்கள் உள்ளிட்டோரின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டே இந்த சட்டம் அறிமுக்கப்படுத்தப்பட்டதே தவிர கருத்து சுதந்திரத்தை முடக்குவதற்காக அல்ல.

இது தொடர்பில் சிவில் அமைப்புக்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், குற்றவியல் சட்டங்கள் மறுசீரமைப்பு தொடர்பான உப குழு மற்றும் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்படுவோரது நிலைப்பாடுகள் கோரப்பட்டு, அவற்றை உள்ளடக்கிய திருத்தங்களுடன் குறித்த சட்ட மூலத்தை மீள சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அண்மையில் வௌவேறு தரப்பினரால் மாறுபட்ட நிலைப்பாடுகளும் , விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே மேற்கூறப்பட்டவாறு திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் வரை , ஏற்கனவே இது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி பணிப்புரை விடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷிரந்தி ராஜபக்‌ஷ  நாட்டை விட்டு தப்பிச்...

2026-09-16 17:44:55
news-image

புகையிரத பொது முகாமையாளரை பதவி விலகக்...

2026-09-16 23:26:17
news-image

புதிய சீனத் தூதுவர் வீ ஹுவாஷியாங்...

2026-09-16 22:09:21
news-image

ராஜபக்‌ஷ குடும்பத்தை இம்ரான் கான் அல்லது...

2026-09-16 16:49:17
news-image

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கு நெருக்கடி: மருந்து...

2026-09-16 16:22:25
news-image

இலங்கையை பிராந்திய நிதித் தொழில்நுட்ப மையமாக...

2026-09-16 16:46:15
news-image

மட்டக்குளி பகுதியில் கோர விபத்து –...

2026-09-16 22:07:10
news-image

மாணவர் குறைவான கிராமப்புற பாடசாலைகளை மூட...

2026-09-16 16:48:05
news-image

“சிரிலிய சவிய” நிதி மோசடி வழக்கு...

2026-09-16 19:27:20
news-image

தமிழ் பேசும் சமூகங்கள் நாட்டின் அரசியலை...

2026-09-16 20:29:10
news-image

நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கல்: செயற்கை...

2026-09-16 14:02:12
news-image

மன்னார் வைத்தியசாலையில் இந்திய நிதியுதவியுடன் அவசர...

2026-09-16 19:10:32