குடந்தையான்

நாமக்கல் கவிஞர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை எழுதிய “நீராருங் கடலுடுத்த..”எனத் தொடங்கும் தமிழ்தாய் வாழ்த்து பாடலை, தமிழக அரசின் பாடலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து,முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டிருக்கிறார். 

இதன் மூலம் அனைத்து அரச நிகழ்ச்சிகளிலும்,இனி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்படும். அத்துடன்  இந்தப்பாடல் இசைக்கப்படும் போது இதற்குரிய மரியாதையையும்வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 

இது மறைமுகமாக தேசிய கீதத்திற்கு இணையான பாடலாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாகதமிழ் ஆர்வலர்களும், தமிழறிஞர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள். 

இதன்மூலம் திராவிடகட்சி  ஆளும் மாநிலமான தமிழகம், தமிழ் மொழியைதங்களின் வலிமைமிக்க பாதுகாப்பு கவசமாகவும், பா.ஜ.க.விற்கு எதிரான தேர்தல் ஆயுதமாகவும்பயன்படுத்த திட்டமிட்டிருப்பது தெரியவருகிறது.

தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு தீவிர இந்துத்துவ அடையாளத்துடன் வளையவரும்மடாதிபதிகள் எழுந்து நின்று,  உரிய மரியாதையைவழங்குவதில்லை என்ற தமிழறிஞர்களின் குற்றச்சாட்டிற்கு தமிழக அரசு உரிய நிவாரணத்தை வழங்கியிருக்கிறது. 

மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்திருந்த கருத்தின்அடிப்படையிலும்  இந்த உத்தரவு அமையப்பெற்றதாகவும்அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-26#page-7

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/