நடிகை அஞ்சலி கதையின் நாயகியாக நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு 'ஜான்சி' என பெயரிடப்பட்டிருக்கிறது.

'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'சமர்', 'நான் சிவப்பு மனிதன்', 'மிஸ்டர் சந்திரமௌலி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் திரு இயக்கத்தில் தயாராக இருக்கும் புதிய திரைப்படம் 'ஜான்சி'. இதில் கதையின் நாயகியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். 

நடிகர் கிருஷ்ணா தொடங்கியிருக்கும் புதிய பட நிறுவனமான ட்ரைபள் ஹார்ஸ் என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் தயாரிக்கும் ஜான்சி திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படுகிறது. 

இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகளை பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதையின் நாயகனாக நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் அஞ்சலி, அப்படத்தின் படப்பிடிப்பில் பங்குபற்றி வருகிறார். இதனை தொடர்ந்து திரு இயக்கத்தில், கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகும் 'ஜான்சி' படத்தின் படப்பிடிப்பில் பங்குபற்றவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.