மட்டக்களப்பு திராய் மடு சுவிஸ் கிராமத்தை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவி மீது கத்தியால் தாக்கிவிட்டு ஒருவர் தப்பியோடியுள்ளார். 

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த மாணவி இன்று காலை 7.30 மணியளவில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தபோது, மோட்டர் சைக்கிளில்  வந்த நபரொருவர் சிறை கைதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம் எது என்று விசாரித்துள்ளார்.

இதனையடுத்து, மாணவி குறித்த நபருக்கு இடத்தை காட்டும்போது கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மாணவின் பெற்றோர் மட்டக்களப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.