என்.கண்ணன்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை தமிழர்களிடம் பொதுவாககாணப்படுகின்ற ஒன்று.

அதன் அடிப்படையில், ஆண்டின் பிற்பகுதியில், தைப்பொங்கலுக்கு தமிழீழப்பிரகடனம் என செய்திகள் வெளியாகும் வழக்கம் முன்னர் காணப்பட்டது.

1980களின் நடுப்பகுதியில் இருந்து, 1990களின் நடுப்பகுதி வரைஇவ்வாறான செய்திகள் அடிக்கடி கொழும்பின் சிங்கள, ஆங்கில ஊடகங்களில் வெளியாவதுண்டு.

அதனை தமிழ் ஊடகங்களும் செய்தியாக்கி வெளியிடுவது வழமை.

விடுதலைப் புலிகள் ஈழப்பிரகடனம் செய்யப் போகிறார்கள் என்று கூறி,சிங்கள மக்களை உசுப்பேற்றுவது சிங்கள, ஆங்கில ஊடகங்களின் பாணியாக காணப்பட்டது.

ஒருபோதும் விடுதலைப் புலிகள் அவ்வாறான இலக்கை கொண்டிருந்ததில்லை.ஏனென்றால் ஈழப்பிரகடனம் செய்வது விளையாட்டல்ல என்பது, அவர்களுக்கு நன்றாகத்  தெரியும்.

விடுதலைப் புலிகளுக்குப் பிறகு, சில தமிழ்த் தலைவர்கள் அடுத்ததைப்பொங்கலுக்குள் தீர்வு வரும், தீபாவளிக்குள் தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையைஏற்படுத்தியிருந்தார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், அடுத்த தீபாவளிக்குள் புதிய அரசியலமைப்புவரும், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிட்டும் என்ற வாழ்த்துச் செய்தியைக்கொடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடுமையானவிமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தார்.

அடுத்தடுத்து தைப்பொங்கலும், தீபாவளிகளும் தான் வந்து போயினவே தவிர,அரசியல் தீர்வும் வரவில்லை, புதிய அரசியலமைப்பும் வரவில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-26#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/