சத்ரியன்
பொருளாதார ரீதியான நெருக்கடிகளைச்சமாளிக்க முடியாமல் அரசாங்கம் ஒரு பக்கம் தடுமாறிக் கொண்டிருக்க, அடுத்த ஆண்டுஆட்சியைக் கவிழ்க்க வாருங்கள் என்று நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சி அழைப்புவிடுத்துக் கொண்டிருக்கிறது.
நீண்டகால அரசியல் அனுபவம், ஒருதசாப்த கால நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி அனுபவம் ஆகியவற்றின் பின்னணியைக்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைப் பிதாமகனாக கொண்ட தற்போதைய அரசாங்கம், மிககுறுகிய காலத்துக்குள்ளாகவே மக்களின் செல்வாக்கை இழந்து போய் நிற்கிறது.
ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டுஆண்டுகளுக்குள், இந்தளவுக்கு வெறுப்பைச் சம்பாதித்த முதல் அரசாங்கம், இதுதான்என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
அதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின்பலவீனங்களும், அதன் செயற்றிறனின்மையும், சரியான கொள்கை வகுப்பு இல்லாமையும்,நாட்டின் நிலைமைகளை மோசமடையச் செய்திருக்கிறது.
ஒரு அரசாங்கத்திடம், வெறுமனேநாட்டை நிர்வகிக்கும் பொறுப்பு மாத்திரம் இல்லை.
வரவுகளையும், செலவுகளையும்முகாமைத்துவம் செய்கின்ற ஒரு நிறுவனம் போல அதனால் செயற்பட முடியாது.
நாட்டு மக்களின் நிலைமைகளைக்கருத்தில் கொண்டு, தேவையான வசதிகளையும், வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுப்பதும்,அதற்கான ஊக்குவிப்புகளை அளிப்பதும் அரசின் முக்கியமான கடமை.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-26#page-3
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM