Published by T. Saranya on 2021-12-29 11:46:08
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு உயர்ரக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய காரை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.
மோடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை டொயோட்டா லேண்ட் குரூஸ் என்ற காரை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது புதிய மெர்சிடிஸ் மேபெக் எஸ் 650 (Mercedes-Maybach S 650) என்ற காரை பயன்படுத்தி வருகிறார்.

இந்த வகை கார்கள் ஏகே 47 துப்பாக்கி தோட்டாக்களின் தாக்குதலை தாங்கும் சக்தியை கொண்டதாகும்.
மேலும், விபத்து ஏற்பட்டால் தானாக பெட்ரோல் டாங்க் மூடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இதேபோல், விஷ வாயு தாக்குதல் (Gas Attack) ஏற்பட்டால் காரில் சுவாசிக்க ஏதுவாக செயற்கை சுவாசக் கருவியும் இதில் உள்ளது.

சமீபத்தில் நடந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்க மோடி இந்த காரில் சென்றுள்ளார்.
கடந்த ஆண்டு, மெர்சிடிஸ் நிறுவனம் இந்த மேபெக் எஸ் 650 காரின் S600 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
குஜராத் முதல்வராக இருந்தபோது, மோடி மஹிந்திரா ஸ்கார்பியோவை பயன்படுத்தியுள்ளார். 2014 இல் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, அவர் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் உயர்-பாதுகாப்பு வாகனத்தை பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.