தலைமைகளால் கைவிடப்பட்ட சமூகமாக முஸ்லிம்கள்

Published By: Digital Desk 2

29 Dec, 2021 | 11:15 AM
image

எம்.எஸ்.தீன்

தமிழ், முஸ்லிம் கட்சிகள் தாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் சமூங்களின்அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கு ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். 

இதில் மாற்றுக்கருத்துக்கள் கிடையாது. ஆனால், தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை என்பது குறுகியநோக்கத்தை அடைந்து கொள்வதற்காக மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க முடியாது. 

தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் உரிமைகளும், அரசியல் அபிலாஷைகளும்,சுயநிர்ணயமும் பாதிக்காத வகையில் ஒற்றுமை அமைய வேண்டும். 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில்தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றைதீர்ப்பதற்கு விட்டுக் கொடுப்புக்கள் அவசியம். 

ஆனால், இரண்டு சமூகங்களும் தாம் நினைத்தது போன்று தீர்வு அமைய வேண்டுமென்றுநீண்ட காலமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

 ஆகவே, இதற்கு தீர்வு காணாது பேரினவாதக்கட்சிகளிடம் நாங்கள் ஒற்றுமையாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று காட்டிக் கொண்டிருப்பதுகுறுகிய நோக்கத்தைக் கொண்டதாகவும், தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்திற்கு நெருக்கடிகடிகளைஏற்படுத்துவதற்காக எடுக்கப்படும் முன்னெடுப்பாகவுமே பார்க்க வேண்டியுள்ளது.

தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து 13ஆவது திருத்தச் சட்ட மூலத்தைமுழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்றும், இன்னும் சில கோரிக்கைகளையும் முன் வைத்து இந்தியபிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சருக்கும் அனுப்புவதற்கு ஒரு ஆவணத்தை தயார் செய்துவருகின்றன.

 இந்த ஆவணம் தமிழர்களின் கோரிக்கையாக இருக்கின்ற இணைந்த வடக்கு, கிழக்குஎன்பதற்கு வலுச்சேர்க்கும் ஒன்றாகவும் அமையும்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-26#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்