கபில்
“சீனத் தூதுவரின் வடக்குப் பயணம் தொடர்பில் சம்பந்தனின் கருத்தில்ஆழமும், அனுபவ முதிர்ச்சியும் இருக்கிறது. சுமந்திரனின் கருத்தில் அவசரமும், அனுபவமற்ற தன்மையும் வெளிப்படுகிறது”
சீனத் தூதுவரின் வடக்குப் பயணம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள், கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து இருவேறு கருத்துக்கள் வெளிப்பட்டிருப்பது ஆச்சரியம்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளிப்படுத்தியிருக்கின்ற கருத்துக்கும், அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், வெளிப்படுத்தியிருக்கின்ற கருத்துக்கும் இடையில் அடிப்படை வேறுபாடு இல்லாவிடினும், வெவ்வேறானவையாக இருக்கின்றன.
இரா.சம்பந்தன், இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு நாட்டின் எந்தப் பாகத்துக்கும் செல்வதற்கான உரிமை உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கின்ற அதேவேளை, இந்தப் பயணத்தையிட்டு தமிழர் தரப்பு அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.
அவர் இந்தியாவுடனோ அல்லது வேறெந்த நாட்டுடனோ ஒப்பீடு செய்து சீனத் தூதுவரின் பயணம் குறித்து கருத்துரைக்கவில்லை.
அவர் முற்றிலுமாக தமிழர் பிரச்சினையில் இருந்து கொண்டு, சீனா எவ்வாறு இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டே கருத்து வெளியிட்டிருக்கிறார்.
அதாவது, தமிழர் பிரச்சினைக்கான தீர்வு பற்றியோ, அது தொடர்பான தமது அணுகுமுறை பற்றியோ, சீனா இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிட்டதுமில்லை, அதுபற்றித் தங்களுடன் பேசியதுமில்லை.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-26#page-1
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM