கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியில் செயலிழந்த நிலையில் துப்பாகிகள் உள்ளிட்ட பல வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் நிறைவு பெற்றன.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றின் பின்பகுதியில் உள்ள காணியிலேயே இவ்வாறு பெருமளவான ஆயுதங்களும், வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த வெடிபொருட்கள் தொடர்பில் நேற்று பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிசார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவத்தினர் இணைந்து குறித்த அகழ்வு பணிகளை முன்னெடுத்தனர். குறித்த விடயம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று இன்று அகழ்வு பணிகளை ஆரம்பித்தனர். 

இதன்போது

12.7 ரக துப்பாக்கி - 01

12.7 ரக துப்பாக்கி ஸ்ரான்ட் - 02

ஆர் பி.ஜி துப்பாக்கி - 03

ரி 57 ரக துப்பாக்கி - 06

ரி 81 ரக துப்பாக்கி - 03

ஆர் பி ஜி செல் - 10

இயக்க தாமத கடத்திகள் - 11

அணைக்கட்டு தகர்க்கும் ஆயுதம் - 05

எல் எம் ஜி ரவைகூடு - 09

12.7 துப்பாக்கி கூடு 01

எம் பி எம் ஜி கூடு - 01

12.7 ரவை செயின் - 08 ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த துப்பாக்கிகள் மற்றும் செல்கள் துருப்பிடித்து காணப்படுவதாகவும், அவை செயல் திறண் உள்ளவையா என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு, நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக செயலிழப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வெடி பொருட்கள் மீட்கப்படும் தனியார் காணியில் விடுதலைப்புலிகளின் முகாம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.