20 ஆவது திருத்தச் சட்டத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கே நன்மை : மக்கள் நடுவீதியில் என்கிறார் இராதாகிருஷ்ணன் 

Published By: Digital Desk 4

28 Dec, 2021 | 05:53 PM
image

20 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ஷ குடும்பத்திற்கே பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றது ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

(28.12.2021) இன்று நுவரெலியா - இராகலை சென்.லெனாட்ஸ் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற  கூட்டத்தில் கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணனுக்கு ஒதுக்கப்பட்ட  பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஒரு தொகை பொருட்கள் (2.12.2021) வலப்பனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கும், கிராமபுற மக்களும் நுவரெலியா - இராகலை சென்.லெனாட்ஸ் ஆலய மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் விஷ்வா புஷ்பநாதன், வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்களான தமிழ்மாறன் ஜனார்த்தன், அ.ஹரிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,

நல்லாட்சி அரசாங்கம் 19 வது திருத்த சட்டத்தை கொண்டு வந்து பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கியது. ஆனால் அந்த நல்லாட்சியில் எதுவும் சரியாக நடைபெறவில்லை அதற்கு காரணம் ஜனாதிபதிக்கு அதிகாரங்கல் இல்லாமையே என்று கூறி இந்த அரசாங்கம் 20 வது திருத்த சட்டத்தை கொண்டு வந்து ஜனாதிபதிக்கு எல்லா அதிகாரங்களையும் கொடுத்தது. எல்லா பிரச்சினைகளையும் ஒருவரால் தீர்த்துவிட முடியும் என்று கூறியே இந்த அதிகாரங்களை ஜனாதிபதிக்கு  கொடுத்தது.

ஆனால் பிரச்சினைகள் தீர்ந்ததா?இல்லை எல்லா பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே போகின்றது.எனவே இந்த 20வது திருத்த சட்டத்தின் மூலம் எந்தவிதமான பயனும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.இந்த அதிகாரத்தின் மூலமாக ஜனாதிபதியால் எதனையும் சாதிக்க முடியவில்லை.ஒரு விடயம் நடந்திருக்கின்றது இந்த சட்டத்தின் மூலமாக ராஜபக்ச குடும்பத்திற்கு பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றது ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற பொழுது அன்று அனைவரும் நினைத்தார்கள் இனிமேல் இந்த நாட்டில் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று நினைத்து அன்று 69 இலட்சம் மக்களும் வாக்களித்து இனறைய ஜனாதபதியையும் பிரதமரையும் தெரிவு செய்தார்கள்.

ஆனால் நாங்கள் மலையக மக்களுக்கு கூறினோம் எங்களுக்கு வாக்குரிமையை பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் மறைந்த ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாச எனவே அவருடைய மகன் சஜித் பிரேமதாசவிற்கு எங்களுடைய வாக்குகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.அதன்படி 60 வீதமான எங்களுடைய மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தார்கள்.ஆனால் நாட்டில் ஏனைய பகுதியில் இருந்த மக்கள் செய்த தவறின் காரணமாக நாம் இன்று 40 வருடங்கள் பின்நோக்கி சென்றுவிட்டோம்.மீண்டும் எல்லா பொருட்களுக்கும் வரிசையில் நிற்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்று இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்களே இந்த அரசாங்கத்தை விமர்சனம் செய்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.நான் நினைக்கின்றேன் இன்று எதிர்கட்சியைவிட அரசாங்கத்தை அதிகம் விமர்சனம் செய்வது ஆளும் கட்சியின் அமைச்சர்களே.

இன்று அரசாங்கம் எந்த திட்டத்தை முன்வைத்தாலும் அதனை நடைமுறைபடுத்த முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை பொருட்களுக்கு விதித்தாலும் அதனை யாரும் கண்டு கொள்வதில்லை.இன்று உரத்தின் விலை ஒரு மூடை 9000 ஆயிரமாக இருக்கின்றது.இந்த விலைக்கு உரத்தை வாங்கி விவசாயிகள் இலாபம் அடைய முடியுமா?இன்றைய மரக்கறிகளின் விலையை மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அதே  போல அரிசியின் விலையையும் மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இன்று இலங்கையில் இருந்து அநேகமானவர்;கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கே முயற்சி செய்கின்றார்கள்.அநேகமாக அனைவரும் கட்வுச் சீட்டை பெற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

இலங்கைக்கு ஆபத்தின் பொழுது உதவுவது இந்தியா என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.ஆனால் அதே நேரத்தில் சீனாவும் எங்களுக்கு உதவி செய்கின்றது.அதற்காக அவர்கள் எங்களிடம் இருந்து எதையாவது எதிர்பார்க்கின்றார்கள்.அது நடைமுறை ஏனென்றால் அவர்கள் கடன் கொடுக்கின்ற பொழுது எதனையாவது எதிர்பார்ப்பார்கள்.ஏனென்றால் யாரும் யாரையும் நம்பி கொடுக்கின்ற ஒரு நிலைமை தற்பொழுது இல்லை.

எனவே நாம் எமது பொருளாதாரத்தை பாதுகாத்து கொள்ள வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக எதையாவது விட்டுக் கொடுக்க வேண்டிய ஒரு நிலைமையிலேயே நாங்கள் இருக்கின்றோம்.எனவே நாங்கள் அனைவரும் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வியட்நாமில் உலகத் தமிழர் மாநாடு :...

2025-01-17 16:56:51
news-image

அரிசி பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு...

2025-01-17 22:14:38
news-image

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய பணத் தொகையுடன்...

2025-01-17 21:52:18
news-image

ஈழத்தமிழர்களின் இறைமையை நிலைநாட்ட "சமஷ்டியே" தேவை!

2025-01-17 21:35:16
news-image

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு...

2025-01-17 21:07:19
news-image

ஈழத்து சிறுவர் நாடக தந்தை குழந்தை...

2025-01-17 20:49:36
news-image

போதைப்பொருளை தடுக்கும் தேசிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்...

2025-01-17 17:32:28
news-image

முல்லை பொதுவைத்தியசாலையின் வளப் பற்றாக்குறைதொடர்பில் சுகாதார...

2025-01-17 18:38:43
news-image

தெற்கில் பாதிக்கப்பட்டவர்களும் எம்மைப்போன்றவர்களே - லீலாதேவி...

2025-01-17 18:20:35
news-image

மறுசீரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற...

2025-01-17 18:11:05
news-image

ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில்...

2025-01-17 17:49:03
news-image

கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரி கிராமம்...

2025-01-17 17:34:46