இலகுரக விமானத்தில் தனியொருவராக உலகை சுற்று வரும் பயணத்தை ஆரம்பத்த இளம் பெண் விமானி சாரா ரதர்போர்ட் இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார்.

Sarah Rutherford in solo round-world record, arrives in SL

அவரது இலகுரக விமானம் இன்று பிற்பகல் இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கியது.

கடந்த ஆகஸ்ட் 13 ஆம் திகதி பெல்ஜியத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கிய 19 வயதான சாரா ரதர்போர்ட், உலக சாதனை படைக்கும் நோக்கில் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட 19 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சாரா ரதர்போர்ட் இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார்.

நாட்டை வந்தடைந்த அவர் தனது அடுத்த பயண இலக்காக எதிர்வரும் 30 ஆம் திகதி இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளார்.

மூன்று மாதங்களில் ஐந்து கண்டங்களில் உள்ள 52 நாடுகளுக்கு செல்வதே அவரது இலக்கு ஆகும்.