கொழும்பு - மட்டக்குளி பகுதியில் அமைந்துள்ள சீனோர் (CEYNOR) படகு கட்டும் தொழிற்சாலையில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த தீ விபத்து இன்று (28)  நண்பகல் இடம் பெற்றுள்ளது.

தீயணைக்கும் படையினர் மற்றும் அப்பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்தில் தொழிற்சாலையிலுள்ள படகுகள் எரிந்து நாசமாகியுள்ளன. சேத விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.

இதுவரை தீப் பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.