கலை நிலா மன்றத்தின் ஏற்பாட்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவை 71ஆண்டு பூர்த்தி நிகழ்வினை நடத்தியது. 

சிறப்பு நிகழ்ச்சியாக இசை நிகழ்ச்சியுடன் கௌரவிப்புகளும் இடம்பெற்றது. விசேட அதிதியாக இ.ஏ.கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்க, சிறப்பு அதிதியாக புரவலர் ஹாசிம் உமர் உட்பட பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். 

சிரேஷ்ட ஊடகவியலாளர் உவைஸ் ஷெரீப் ஒருங்கிணைத்து வழங்கிய இன்னிசையில் அறிவிப்பாளர் நாகபூசனிக்கு திருமதி மதியரசன் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. 

முன்னாள் மேல் மாகாண உறுப்பினர் யு.ஊ.ஆ.உவைஸ் அவர்களால் சிரேஷ்ட ஊடகவியலாளர் உவைஸ் ஷெரீப்பிற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கவிக்கமலின் அக்ஷரா இசைக்குழுவினரும் பாஸிலின் வீனஸ் இசைக்குழுவினரும் இணைந்து இசை வழங்கினர். பிரசாந்தினி, கவிக்கமல் பாடுவதை படத்தில் காணலாம்.