கிளிநொச்சி மயில்வாகனபுரத்தில் நேற்றிரவு(27) நத்தார் நிகழ்வு முடித்து கார் ஒன்றில் பயணித்த அருட்தந்தையர்களின் கார் வீதியில் மறிக்கப்பட்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அருட்தந்தையர்கள் தெரிவிக்கையில்,
நேற்றிரவு(27) நத்தார் ஒன்றுகூடல் நிகழ்வு முடித்து அதில் கலந்துகொண்ட ஏழு அருட்தந்தையர்களில் ஒருவரை தவிர ஏனையவர்கள் தங்களின் அருட்தந்தையர்களுக்குரிய ஆடைகளுடன் கார் ஒன்றில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது சுமார் 10 பேர் கொண்ட இளைஞர் குழுவொன்று மது போதையில் மயில்வாகனபுர வீதியில் காரை மறித்து பணம் கோரினர்,
அருட்தந்தையர்கள் மறுப்புத் தெரிவித்த போது அவர்கள் பயணித்த வாகனம் அடித்து உடைக்கப்பட்டதோடு, அருட்தந்தையர்கள் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ள்ப்பட்ட போதும் அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொண்டதாகத் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் அருட்தந்தையினர் குறிப்பிட்டனர்.
மேலும் அருட்தந்தையர்கள் தங்களது ஆடைகளுடன் உள்ள போதே அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவதூறாக பேசியமை மிகுந்த கவலையினை ஏற்படுத்துவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM