பிலிப்பைன்ஸ் சூறாவளிக்கு பலியானோர் எண்ணிக்கை 388 ஆக உயர்வு

By Vishnu

28 Dec, 2021 | 09:20 AM
image

சமீபத்திய ஆண்டுகளில் பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிகவும் அழிவுகரமான சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று 388 ஆக உயர்வடைந்துள்ளது.

Image

இதேவேளை பாதிக்கப்பட் பகுதிகளில் நோய் தாக்கம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக பிலிப்பைன்ஸ் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ராய் சூறாவளி டிசம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் பிலிப்பைன்ஸை தாக்கியது.

இதனால் மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், கொடிய வெள்ளமும் பிலிப்பைன்ஸின் பல பகுதிகளை மூழ்கடித்தது.

அனர்த்தத்தினால் மேலும் நூறாயிரக்கணக்கான மக்கள் வீடற்றவர்கள் ஆனார்கள்.

ராய் சூறாவளி தாக்கம் காரணமாக 60 பேர் காணாமல் போனதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 388 ஆக உயர்வடைந்ததாக தலைநகர் மணிலாவில் உள்ள சிவில் பாதுகாப்பு அலுவலகம் திங்களன்று உறுதிபடுத்தியது.

அதேநேரம் 430 நகரங்கள் பாதிப்புக்குள்ளாகின. அங்கு சுமார் 482,000 வீடுகள் சேதமடைந்தன. நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சூறாவளி தாக்கத்துக்கு உள்ளாகி  உதவியைப் பெற்று வருவதாகவும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

300,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு முகாம்களில் உள்ளனர், மேலும் 200,000 க்கும் அதிகமானோர் உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க வெள்ளப் பெருக்கினை அடுத்து ஏற்பட்ட நோய் தாக்கம் காரணமாகவும் 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானில் மாஷா அமீனி ஆர்ப்பாட்டக்காரர் ஒருவருக்கு...

2022-12-08 14:06:43
news-image

இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் எழுச்சி

2022-12-08 13:03:39
news-image

குஜராத்தில் ஏழாவது முறையாக பாஜக வெற்றி

2022-12-08 12:54:27
news-image

சைபர் தாக்குதல் - இரண்டாம் உலக...

2022-12-08 12:44:14
news-image

குஜராத்தில் பாஜக, இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ்...

2022-12-08 12:59:04
news-image

பாலி குண்டுவெடிப்பு குற்றவாளி விடுதலை -...

2022-12-08 12:25:50
news-image

இந்திய விமானப்படையில் புதிய ஏவுகணை கட்டமைப்புடன்...

2022-12-08 13:42:48
news-image

2021-22 இல் இந்தியா 84.84 பில்லியன்...

2022-12-08 13:42:00
news-image

ரஷ்ய எண்ணெய் விலை வரம்பு :...

2022-12-08 13:40:58
news-image

ரயில் பாதை நடுவே சிக்கிக்கொண்ட மாணவி...

2022-12-08 11:54:06
news-image

இஸ்ரேலியப் படையினரின் தாக்குதலில் 3 பலஸ்தீனர்கள்...

2022-12-08 11:18:33
news-image

குவாத்தமாலாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஊழல் வழக்கில்...

2022-12-08 10:30:43