பூஸ்டர் தடுப்பூசி திட்டத்துக்கு உதவும் வகையில் பைசர் தடுப்பூசிகளின் மற்றொரு தொகுதி இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளது.

அதன்படி 137 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 1,147,770 பைசர் தடுப்பூசி தொகுதிகள் முதலில் அமெரிக்காவில் இருந்து நெதர்லாந்துக்கும் பின்னர் அங்கிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் வழியாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

விமான நிலையத்தை வந்தடைந்த தடுப்பூசி தொகுதிகள் பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டு, குளிரூட்டப்பட்ட லொறிகளின் உதவியுடன் அரச மருந்தக கூட்டுத் தாபனத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.