முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் 3 வயது குழந்தை உட்பட இரண்டு பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரடியின் தாக்குதலுக்கிலக்கான சகோதரர்கள் வைத்தியசாலையில் அனுமதி | Virakesari .lk

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுதந்திரபுரம் பகுதியில் இன்று (27-12-2021) மாலை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த  பெண்  ஒருவரும் அவருடன் கூட இருந்த 3 வயது பெண் குழந்தை ஒன்றும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளது. 

இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகிய  அவர்கள் உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.