(எம்.ஆர்.எம்.வசீம்)
ஈரானுக்கு செலுத்தவேண்டிய கடன் தொகையை தேயிலை ஏற்றுமதிசெய்து அடைப்பதற்கு இணக்கப்பாட்டுக்கு வந்ததுபோல் ஏனைய நாடுகளுடனும் கலந்துரையாடி சலுகை அடிப்படையில் கடனை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆளும் கட்சி உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
அவ்வாறு இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தால் நாங்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாகுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடு எதிர்கொண்டுள்ள டொலர் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள எடுக்கவேண்டிய நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடு பாரிய டொலர் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு ஆளாகி இருக்கின்றது. அதனால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதிலும் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. அதேபோன்று தற்போது கைவசம் இருக்கும் வெளிநாட்டு செலாவனி அடுத்த வருடம் வெளிநாடுகளுக்கு செலுத்தவேண்டிய கடன் தவணைகளுக்குக்கூட போதுமானதாக இல்லை.
அதனால் கடன் பெற்றுக்கொண்ட நாடுகளுடன் கலந்துரையாடி கடனை மீள செலுத்துவதற்கு மேலும் சில கால அவகாசம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கவேண்டும் என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM