பேச்சுவார்த்தை தோல்வி : போராட்டம் தொடரும் - புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

By Vishnu

27 Dec, 2021 | 06:22 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத திணைக்கள பொது முகாமையாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து புகையிரத போக்குவரத்து சேவையில் முன்னெடுக்கப்படும் எரிபொருள் விநியோகம், பிறிமா மா விநியோகம்,ஹோல்சிம் நிறுவனத்திற்கான சுண்ணாம்பு விநியோகம் ஆகிய சேவைகளில் இருந்து விலகியுள்ளோம்.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை பொது பயணிகளை நெருக்கடிக்குள்ளாக்காத வகையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்படுவோம் என  புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

மருதானையில் உள்ள புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் பதவி உயர்வு, இடமாற்றம்,சேவையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த  23ஆம் திகதி முதல் புகையிரத பொதி விநியோக சேவை, சாதாரன புகையிரத பயணச்சீட்டு விநியோகம் ஆகிய சேவைகளில் இருந்து விலகியுள்ளார்கள்.

புகையிரத திணைக்கள மட்டத்தில் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்கள். 

நியாயமற்ற கோரிக்கையை முன்வைத்து ஏற்கெனவே நட்டமடைந்துள்ள இலங்கை புகையிரத திணைக்களத்தை மேலும் நட்டமடைய செய்வது அவர்களின் பிரதான நோக்கமாக உள்ளது என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 10:52:21
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22
news-image

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள்...

2022-10-06 18:47:07
news-image

ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள்...

2022-10-06 18:37:34
news-image

ஜனாதிபதி ரணிலை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை -...

2022-10-06 22:00:05