நாட்டின் அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் எதிர்வரும் புதன்கிழமை (05-10-2016) கொழும்பில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட சலுகைகளை பெற்றுத் தருமாறு கோரி, குறித்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.