சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

Published By: Digital Desk 3

27 Dec, 2021 | 03:54 PM
image

(எம்.மனோசித்ரா)

நடபாண்டில் கடந்த நவம்பர் மாதம் வரை சுமார் ஒரு இலட்சம் சுற்றுலாப்பயணிகள் மாத்திரமே வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

சுற்றுலாப்பயணிகளின் வருகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 79.3 சதவீதம் வீழ்ச்சி காணப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு ஜனவரியில் 1,682 சுற்றுலாப்பயணிகளும், பெப்ரவரியில் 336 சுற்றுலாப்பயணிகளும், மார்ச்சில் 4,581 சுற்றுலாப்பயணிகளும் , ஏப்ரலில் 4,168 சுற்றுலாப்பயணிகளும் , மே மாதத்தில் 1497 சுற்றுலாப்பயணிகளும் , ஜூனில் 1,614 சுற்றுலாப்பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

இதேபோன்று ஜூலையில் 2,429 சுற்றுலாப்பயணிகளும் , ஆகஸ்டில் 5040 சுற்றுலாப்பயணிகளும், செப்டெம்பரில் 13,547 சுற்றுலாப்பயணிகளும் , ஒக்டோபரில் 22,771 சுற்றுலாப்பயணிகளும், நவம்பரில் 44,294 சுற்றுலாப்பயணிகளும் வருகை தந்துள்ளனர். அதற்கமைய இவ்வாண்டில் கடந்த நவம்பர் மாதம் வரை 104,989 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர்.

எனினும் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம் 2 இலட்சத்திற்கும் அதிக சுற்றலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். அதாவது ஜனவரியில் 228,434 சுற்றுலாப்பயணிகளும் , பெப்ரவரியில் 207,507 சுற்றுலாப்பயணிகளும், மார்ச்சில் 71,370 சுற்றுலாப்பயணிகளும் மற்றும் டிசம்பரில் 393 சுற்றுலாப்பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

2020 இல் ஏப்ரல் தொடக்கம் நவம்பர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் எவரும் வருகை தரவில்லை. அதற்கமைய கடந்த ஆண்டு 4 மாதங்களில் மாத்திரம் 507,704 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ள போதிலும், இவ்வாண்டில் கடந்த 11 மாதங்களிலும் ஒரு இலட்சம் சுற்றுலாப்பயணிகள் மாத்திரமே வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49
news-image

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 

2025-03-21 15:05:25
news-image

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை...

2025-03-21 14:03:11
news-image

ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு...

2025-03-21 15:41:16
news-image

சிரேஷ்ட பிரஜைகளின் 10 இலட்சத்துக்கும் குறைவான...

2025-03-21 15:07:09
news-image

மது அருந்திய போது நண்பரின் கை...

2025-03-21 13:23:49
news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00
news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16